அன்றும், இன்றும்
அன்றும், இன்றும்!
அன்று...
வறுமை இருந்தது!
அதுவே பள்ளிக்கூடமாய்,
வாழ்க்கையை கற்றுத்தந்தது!
இன்று...
வசதி இருக்கிறது!
சந்தோஷமான விஷயம் தான்!
ஆனால், சிலர்,
வாழ்க்கையை கற்றுக்கொடுப்பதில்,
மும்மரம் காட்டாமல்,
உல்லாசத்திற்கு மும்மரம் காட்டுவதை
நினைத்தால் தான், வேதனையுறுகிறது மனம் !