விரல் கணக்கு

ஒரே முகுர்த்தம்
ஒரே மேடை
பத்து ஜோடிகள்
பொருந்திய பத்து பொருத்தங்கள்
நகமில்லா அவன் விரல்கள் மணமகன்களாகவும்
நீண்ட நகம் கொண்ட அவள் விரல்கள் மணப்பெண்களாகவும்
அந்த இருள் சூழ்ந்த மேடையில் அவர்கள் இறுக்கிக் கை கோர்த்த தருணம்
தேவர்கள் வாழ்த்தி புஷ்ப மாரி பொழிய
டும் டும் டும் மேலச் சத்தம்!!!!!

எழுதியவர் : மல்லி (5-Apr-17, 8:17 pm)
சேர்த்தது : மல்லி
Tanglish : viral kanakku
பார்வை : 82

மேலே