உன் விழியால் சம்மதம் சொல்லடி 555

என்னுயிரே...

உன் கொலுசுகள் சொல்லும் காதல்
மொழியை நான் எப்படி அறிவேன்...

உன்னிடம் கேட்டால் என்னிடம்
கழட்டி கொடுக்கிறாய்...

நீயே கேட்டுக்கோ என்று...

உன் விழிகளின் மொழியை
நான் அறிவேன்...

கொலுசின் மொழியை
கற்றுக்கொடடி கண்ணே...

தொடக்க பள்ளியில் படிக்கும்
போதெல்லாம்...

பௌர்ணமி நிலவை நான்கண்டு
ஓடினாள் என்னுடன் ஓடிவரும்...

நின்றாள் என்னுடனே
நிற்கும்...

நான் பார்க்கும் போதெல்லாம்
என் வீட்டிற்கு அழைத்து வருவேன்...

எல்லாம் கற்பனை என்று
பருவவயதில் உணர்ந்தேன்...

உன்னை கண்டபின் தானடி
உண்மையென்று உணர்கிறேன்...

என்னோடு நீ
நடைபோடுவதும்...

செல்லமாக என்னை நீ
விரட்டுவதும் வான்நிலவடி நீ...

உன்னை என் வீட்டிற்கு நிரந்தரமாக
அழைத்து செல்வது எப்போதடி...

நீ சொல்லும் தேதியில் உனக்கு
நான் மாலையிடுகிறேன்...

அதுவே சிறந்த
சுபமுகூர்த்தநாள் நமக்கு...

என்னுயிரே எப்போது
சொல்வாய் நீ என்னிடம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Apr-17, 8:29 pm)
பார்வை : 435

மேலே