மருவும் இன்ப மயக்கம்

மருவும் இன்ப மயக்கம்!
========================
கதிர் ஒளி தழுவ
முதிர் நிலவு ஒளிரும்
அமுதைப் பரிந்து பொழியும்
குமுதம் விரிந்து குலுங்கும்

தென்றல் தளர்ந்துத் தழுவ
சோலை கிளர்ந்துச் சிலிர்க்கும்
அன்று அலர்ந்த மென் மலர்
நன்றே வாசம் வீசும்

அரி மயங்கி இசைக்கும்
விரிந்த மலர் நெருங்கும்
விரி மென் மலரில்
அரி தஞ்சம் அடையும்

கருத்து ஒருமித்தக் காதலால்
பெருகும் உயர் அன்பே
பருவாம் இருவர் இணைந்தே
மருவும் இன்ப மயக்கம்!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (6-Apr-17, 7:23 am)
பார்வை : 138

மேலே