மனிதன் ஒரு விசித்திரமான மிருகம்

ஏதோ ஒரு சதையின்பத்தில் உண்டானவன்...
இதோ இந்த சிதையில் உஷ்ணதியானம்.. செய்கிறான்
ஐீவசமாதிக்கும் உக்கிரமானது இந்த தவம்...

சுடுகாட்டு மத்தியத்தில் அக்னிமூலையில் ... உலைவைத்து உறங்குகிறான்...
காற்று தீயவனை தீதின்க யாகம் வளர்க்கையில்... தூரம் நின்று பார்க்கிறேன் நான்...

எரிகிற மனிதன் ஒருமுறை எழுவான்.... சோம்பல் முறித்துக்கொள்வன்... அவ்வேளையில் சிதறும் சாம்பல்கள் காற்றுடன் அலையும்...
பறக்கும் இலைக்கும் .. விழும் நட்சத்திரத்துக்கும் ... இந்த சாம்பலுக்கும் என்ன வித்தியாசம்?

பூஜ்ஜியத்தில் பெரிதென்ன?... என்னுள் ஒரு கிறக்கம் பாய்ந்திருக்கிறது... எதனாலாே இதையெல்லாம் ரசித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்....

தெரியுமா உங்களுக்கு ? எரியும் மனிதஉடலில் எரியாத சில பாகங்கள் மிஞ்சும்... பெரும்பாலும் மண்டைகவசம்... முதுகெலும்பு. ஆகியன... அரிதாய்.. இதயம்....

ஆச்சரியம் சதை எரியாமல் நிற்கிறதே! அதனை ஊழியர் யாருக்கும் தெரியாமல் தனியே புதைப்பதை பார்கிறேன்... இரு எலுமிச்சம்... கொஞ்சம் மஞ்சள் என மசாலா கலவை போல ...
உடன் வைத்து புதைத்தார்...

என்ன என்னவோ ரசனைகள் மனிதன் ஒரு விசித்திரமான மிருகம்...

எழுதியவர் : பவித்ரன் kalaiselvan (7-Apr-17, 7:53 pm)
பார்வை : 470

மேலே