பம்பாய்
பம்பாயில் குண்டு வெடித்தது
பாரதமே அதிர்ந்தது.
அந்தி சாயும் நேரம்
அடுத்தடுத்து வெடி ஓசை
சவேரி பஜார், ஓப்ரா ஹவுஸ், தாதர்
என்று மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு.
அனாதைகள், பலரை அனாதை
ஆக்கிய கோரச் செயல்.
25 கோடி வைரங்கள் சிதறின
இந்திய. தாயின் பல வைரங்கள் மறைந்தன.
உணர்வுகளை இழந்தோரினால்
உயிர் இழந்தோர் பலர்
கண்ணீரை இழந்தோரின்
காட்டுமிராண்டி செயலால்
கண் இழந்தோர்,கை இழந்தோர்
கை கால் இழந்தோர்
எத்தனை! எத்தனை!
கதறல்களின் வலி கேட்டு
வானம் கூட கண்ணீர் மழையில்
இவர்களின் குண்டுகள் அழித்தது.
மக்களை மட்டுமல்ல.
இவர்களின் மதங்களையும்தான்
காந்தி பிறந்த நாட்டில்
கோட்சேகளுக்கு கொண்டாட்டமா?
சமுதாயம் சரி செய்ய
முடியாத இவர்களை
சட்டங்கள் சரி செய்யுமா?