என் தாய்மொழி தமிழ் தரும் செந்தமிழ் அமுதம்

பாலினம் என்றால்
ஆணினம் பெண்ணினம் இல்லை !
எனக்கு
தமிழ் வள்ளுவனின் முப்பாலினம் !

தேன் என்றால்
பூக்களின் தேன் தேன் கூட்டுத் தேன் இல்லை !
எனக்கு
கவிஞன் பாடும் செந்தமிழ்த் தேன் !

அமுதம் என்றால்
வானவர் பாற்கடலில் கடைந்த கலச அமுதம் இல்லை !
எனக்கு
என் தாய்மொழி தமிழ் தரும் செந்தமிழ் அமுதம் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-17, 4:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 144

மேலே