தமிழ் புத்தாண்டை வரவேற்போம்

வா வா
தமிழ் புத்தாண்டே ...
வான் பொழிந்திட வருவாயே ...
எம் உழவரின் நிலங்களை நீ காப்பாயே ...
(வா வா... )
மண் மிதிக்கும் உழவனுக்கு
மழை தரவே வேண்டுகிறேன் ...
கண் விழிக்கும் சூரியனாய்
நீ விழிக்க வேண்டுகிறேண் ....
(வா வா... )
உன் மகனின் கண்ணீர்துளி
அதை நீ அகற்ற நானும் வேண்டுகிறேன் ...
உன் மகனின் புண்ணகையை
நீ மனம் குளிர ரசிக்க வேண்டுகிறேன் ....
இன்றைய விடியள் உழவன் வாழ்க்கையில்
நல்லதோர் விடியள் ஆகட்டுமே ...
மும்மாரி பொழிந்து உழவன் வாழ்க்கையும்
நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன் ...
இன்றைய வருடம் பிறக்கையிலே
உழவன் வழ்க்கையில் மலரட்டுமே ...
(வா வா... )