சித்திரை வாழ்த்துக்கள் - சி எம் ஜேசு
இத்தரை தமிழ் மண்ணிலே தான்
எத்துனை தமிழ் இன்பங்கள்
அத்தனைக்கும் அழகு சேர்க்கும்
ஆய கலைநிறைந்த தமிழ் நாடே
ஏர் உழவை காப்பாய் ஏற்றங்களை தருவாய்
வேற்றுமை இல்லாத இன்பத்தை உழவர்க்கு அளிப்பாயே
மங்களத்தை தந்திடுவாய் தமிழ் மாண்புகளை காத்திடவே
சிங்களத்தீவிலும் எம் தமிழ் உரக்க ஒலிக்கட்டும்
வாழ்த்துக்கள் வணக்கங்கள் வான் நிறைக்கும்
மேகங்களின் நன்மை நமக்கு கிடைக்க
தமிழ் எனும் அமுது உயிர் வாழ்வுக்கு வேண்டியது
தமிழ் எனும் அமுது அகில உலகுக்கும் வேண்டியது