மூங்கில்

வளையும் மூங்கிலை எடுத்தான்
கூடை பின்னினான் கட்டில் செய்தான்
தொட்டில் செய்தான் ஊஞ்சல் செய்தான் !

வளையாத மூங்கிலை எடுத்தான்
பந்தல் கால்கள் நட எடுத்துச் சென்றான்
கூரை வேய குறுக்கு கம்பாக்கினான் !

எங்கிருந்தோ வந்தான்
இடைச் சிறுவன் நான் என்றான்
என் பெயர் கண்ணன் என்றான் !
வளையாத மூங்கிலை எடுத்தான்
ஏழு துளை செய்தான்
இதழ் குவித்தான் விரல் பதித்தான்
கீதம் இசைத்தான் !

எழுதியவர் : கல்பனா (16-Apr-17, 8:44 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : moonkil
பார்வை : 165

மேலே