கவிதை, கவிதை

கவிதை.......
கற்பனையின் வடிகால்,
வார்த்தைகளுக்கு அரிதாரம்,
மொழிக்கு அலங்காரம்.
எடுத்துச் சொல்ல வரும் கருத்திற்கு,
எதுகை, மோனை சேர்க்கும் மந்திரம்,
இயல்பு நடைக்கு எதிர் நடையாகும் தந்திரம்.
இசை சேர்க்க இனிமையாகும்
எழுதிப் படிக்க ஓவியமாகும்,
இலக்கணம் மீராதவை மரபாகும்,
மாறியவை நல்ல நடையாகும்.
வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா
என்று தமிழாய்ந்த நல்லோர் அறிய,
அறிந்தவர் அருமையாய் "பா" புனைய,
புனைந்தோர் புலவர் என்றே பெருமை பெருவர்.