நாணம்
நாணம்
சாலையோரமாகவே நடந்து சென்றேன்
மரத்துக்குப் பின் மறைந்து
மறைந்து சென்றேன், யாரும்
என்னை அவச்சொல் பேசாமலிருக்க
கேலி செய்யாமலிருக்க
நாணம் கொண்டேன், பிறரை
பார்பதற்கு, அச்சத்தை
உள்வாங்கினேன், பிறரிடம்
பேசுவதற்கு, நாணம்
என்னும் போர்வை
என்னை சூழ்ந்திருந்தது
நானோ அதை
துச்சமாய் கருதி
கிழிதெற்ந்தேன்.