என்னவள் இவள்தான்
மஞ்சள் பூசிய முகத்தை
ஆச்சி செஞ்சு வெச்ச
வாசனை திரவியம் கலந்த
கடலை மாவு பொடியில
ஆத்து நீரில் கழுவி விட்டு
துவலைகொண்டு துடைத்து
சீவி முடித்த தலையில
மதுர மல்லி செண்டு வெச்சு
நெத்தியில் கும் கும பொட்டு வெச்சு
காதுல கம்மல் மூக்கில் சிவப்பு கல்லு
நீண்ட லாகிய கழுத்தில்
அம்மாவின் தங்க மாங்கா மாலை அணிந்து
கைகள் இரண்டில் வளையல்கள் கல கலக்க
கால்களில் வெள்ளி கொலுசுகள்
அவள் அன்ன நடைக்கு
ஜல் ஜல் என்று ஜதி பாட
ஒய்யாரமாய் என் கண்கள் முன்னே
சின்னாளம் பட்டு சேலை கட்டி
வந்து நின்ற பாவை அவள்
என் அத்தை மகள் ரத்தினம்
நகரத்தின் காத்து இன்னும்
அவள் மீது படவில்லை
மாசற்ற பெண் பாவை அவள் மீது;
பண்டைய தமிழ்ப் பெண்ணாய்
நம் கலாசார பாரம்பரியத்தை
இன்னும் நிலை நிறுத்தும்
கலப்படம் ஏதும் இலா
கிராமிய தமிழ்ப் பெண்
இவள் தான் நான் விரும்பும்
என்னவள் என் காதலி