அதிர்ந்த மகன்
பூச்சிக் கொல்லியில்
முடிகிறது
ஆந்திரத்தில்!
தூக்கு கயிற்றில்
ஊசலாடுகிறது
பஞ்சாபில்!
தற்கொலைகளில்
தள்ளப்படுகிறது
கர்நாடக, கேரளா
விவசாயிகளின்
வாழ்க்கை
முன்னேறுகிறது
டிஜிட்டல் இந்தியா!
ஆசையாய்
வாங்கி வந்த
குல்லாவைப் பார்த்தே
மகிழ்ந்தான்
அடுத்த நொடியே
அதிர்ந்தான்
அரைஞான் கயிற்றின்கீழ்
காணாமற் போயிருந்த்து
கோமணம்
விவசாயின் மகன்!
---கவிஞர் கே. அசோகன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
