காதலிக்கு நன்றி

என் சிறு இதயத்திற்கும் பிரிவின் வலியை உணர்த்தியவளே

அழ மறந்திருந்த எனக்கும் அழுகையை மீண்டும் நினைவூட்டியவளே

உன்னிடம் அதிகம் உரிமை எடுத்து பழகியதை சுட்டிக்காட்டியவளே

அன்பிற்கும் குறிப்பிட்ட ஒரு எல்லையுண்டு என்று நிரூபித்தவளே

அனைத்திற்கும் நன்றி...

எழுதியவர் : நந்து (21-Apr-17, 1:57 pm)
சேர்த்தது : நந்து தமிழன்
Tanglish : kathalikku nandri
பார்வை : 274

மேலே