அன்புக்கடல்

அன்பே அன்பே என்று அன்பைப் பற்றியே நான் எழுதக் காரணம், அன்பென்னும் கடலில் மூழ்கி நானென்பவன் முழுவதும் அன்பாகக் கரைந்து, அன்பாகிய கடலோடு கலந்து அன்பின் மகிமையை அகிலம் அறியச் செய்ய வேண்டுமென்பதே...

யான் அழைக்கும் அன்பே என்னும் வார்த்தை பெண்மையையும் குறிக்காது,
ஆண்மையையும் குறிக்காது,
ஆண்மை, பெண்மை கலந்ததையும் குறிக்காது,
யாவரிடமும் நிறைந்துள்ள அன்பென்னும் அந்த அழகைக் குறிக்கிறது....

அகத்தின் இருப்பு அன்பானால், அகமும் புறமும் அழகாய் அந்த அன்பின் ஆதிக்கத்தால் யாவும் வசப்பட வறுமைகள் இல்லாதொழிய வெறுமைகள் எல்லாம் நிறைவுகளாய் மாற, அன்புள்ள உயிரினங்களைக் காக்க, இயற்கையும் அன்பு கொள்கிறது....

அன்பின் வழியில் அன்போடு வாழ்வதே ஆனந்த வாழ்வு...

பாதை மாறிய இருதயங்களில் எல்லாம் அன்பு குடிகொண்டு தான் செல்லும் பாதையையும், அதனால் விளைந்த துன்பத்தையும் அறிந்து வாழ்வின் அனுபவ ஞானம் பெற்று, அந்தம் அருகில் வரும் நேரம், அறிவானது விழிப்படைந்து ஞானம் பெற்று ஆன்மா கூடுவிட்டு பிரிகிறது....

உடலில் உறைந்த ஆன்மா தூய்மையானது என்றாலும் அது
தூய்மையானதாக நிலைத்திருக்க அன்பென்னும் கடலில் மூழ்கியிருக்க வேண்டியதாகிறது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Apr-17, 7:48 pm)
பார்வை : 3824

மேலே