இழுக்கில் சிக்கிய எம் தமிழ்நடை

எனையாளும் தமிழ்மொழியை சுயநடையில் வடித்ததற்காய்
மிகையான பெயரெனக்கு வித்திட்ட எம் தோழா...!

துணைதேடும் முன்னரே எனை பிணை வைத்த பெண்ணொருத்தி
மனையேற மறுத்ததனால் முனையொடிந்த முள்ளானேன்...

தீட்டிய காகிதக் கம்பளங்களில் ஓடிய குருதிக்கரை
மூட்டிய தீயினில் முற்றற்று எரிகின்றது இன்றுவரை...

"காலைச் சூரியன் ஓசையிடுவதாய்...
பிறைநிலா குறைகூறுவதாய்...
நரைச்சிகை நறுமணம் வீசுவதாய்...
நாரைகளுடன் தேரைகள் வலம்வருவதாய்..." - என
தோன்றியவையெல்லாம் என் கோணிப்பைகளில் கோட்பாடற்றுக்கிடக்கின்றது...

இலக்கணம் புணைய இலக்கியங்கள் படைத்த கவிஞர்கள் பலர் அறிவர்
எதார்த்த எழுத்துக்களால் எழுதப்படுவதே இவன் வரிகளென்று...

துணைதேட இணையம் வருபவர்களுக்கு ஒருவேளை தோன்றலாம்
எவர்நிலத்திலோ பாய்த்தோடும் வரித்துளிகளை மடையடைத்து திசைதிருப்ப...

வேர்முனை அறுந்த கூர்முனை வாளெடுத்து
போர்முனை வீரனென மார்நிமிர்த்தி செல்பவன் நான்...

கவித்துவம் மறைந்த சொல்லெடுத்து அதன் மகத்துவம் விளக்கிட வேண்டுமானால்
தனித்துவம் வேண்டும் தோழா தமிழ்நடை மகத்துவம் காண்பாய் தோழா...!

வலியுணர்த பலவழிகள் இழிசொல்லாய் இருக்கும்போது
உணர்ச்சியூட்டும் உரையாடல்கள் உலகில் உள்ளதென உணர்ந்திட்டேன்...

உறைந்துபோன நீர்குமிழியின் வெற்றுப் பகுதிகளைக் காண
வெட்டித்தான் பார்க்கவேண்டும் இறந்துகிடக்கும் மடல்களையெல்லாம்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (27-Apr-17, 8:11 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 94

மேலே