பெற்றெடுத்து வளர்த்த மகன்

நட்ட செடி வளர்ந்து மரமாகி
நிழல் தந்தது
விதைத்த விதை நாற்றாகி நெல்லாகி
உணவாகிப் பசியாற்றியது
இறைத்த கிணறு நீர் தந்து
தாகம் தணித்தது
பெற்றெடுத்து வளர்த்த மகன்
நிழலாகக் கூட இல்லை
நினைவு கூட இல்லாமல்
எங்கோ இருக்கிறான் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Apr-17, 9:36 pm)
பார்வை : 117

மேலே