வாழ்க்கை

வானவில்லில் நிறங்கள் ஏழு
அதைக் கண்டாலே மனதில்
ஓர் இன்பம் ; அதுவே ஒரே
நிற வானவில்லாய் இருந்தால்
அதனை உவகை தந்திருக்கமா
காண்போர் மனதிற்கு அது போல
பல்வகை ருசிகள் இருப்பதால்தான்
ருசிகளில் நாட்டம் நாவிற்கு
சுரங்கள் ஏழு இருப்பதால் தான்
எத்தனையோ எத்தனையோ ராகங்கள்
இசையாய் வந்து நம்மை மகிழ்விக்க
பருவங்கள் மாறி மாறி வந்தால் தான்
உள்ளத்திற்கு ஒரு கிளுகிளுப்பு
இன்பமும் சோகமும் கலந்தால் தான்
வாழ்க்கையின் பயணம் உவகைதரும்
நிழலின் அருமை வையல் இருந்தால்
அன்றோ தெரியும்
இப்படி ஒன்றே என்றில்லாமல்
பல பல சுவைகள் சேர்ந்தாலே வாழ்க்கை
இன்பமும் துன்பமும் சேர்ந்திருப்பது போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Apr-17, 4:55 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 267

மேலே