கவிதைக்கான சொற்கள் தேடலில்

துயில் கலைத்த முதல் நொடி
உன் அழகு முகம் வந்து -என்
மனக்கண் முன் நின்று
இன்றைய பொழுதின் முதல்
கவிதை ஒன்று சொல்லேன் என்று
கெஞ்சி கொஞ்சி கேட்கும் அக்கணத்தில்
கவிதைக்கான சொற்கள் தேடலில்
தொலைந்து போகிறேன் ..
உன் நினைவுடன் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (29-Apr-17, 3:21 pm)
பார்வை : 104

மேலே