காதல் வலி---பாடல்---

சொந்த மெட்டில் :


பல்லவி :

இமைகளில் ஒரு துளி வழிகிறதே
இதயத்தை அது வந்து சுடுகிறதே...
கனவுகள் கண்ணீரில் கலைகிறதே
நினைவுகள் நெஞ்சுக்குள் அலைகிறதே......

பிரிந்து நீயும் சென்றதினால்
எரியும் நெருப்பில் என் உடல்...
மறந்து நீயும் இருப்பதினால்
மரணம் நெருங்கும் என் உயிர்...

விடியும் பொழுதில் இருள் தான் சூழுமோ?...
முடியும் கதையின் முடிவு தான் மாறுமோ?...
விடியும் பொழுதில் இருள் தான் சூழுமோ?...
முடியும் கதையின் முடிவு தான் மாறுமோ?...

இமைகளில்......


சரணம் 1 :

முள்மீது நான் அமர்ந்து பாடுகிறேன்...
கல்வீச நான் உடைந்து வாடுகிறேன்...
முள்மீது நான் அமர்ந்து பாடுகிறேன்...
கல்வீச நான் உடைந்து வாடுகிறேன்...

நிலவோடு மேகத்துக்கு ஏன் இந்தக் கோபம்...
நிழலாடும் பூமிக்கு நான் இன்று பாரம்......

சொல்லாத சோகங்கள் மனதோடு
ஊமையாகி வதைக்குதே நாளுந்தான்...
செல்லாத சோலைக்குள் நடைபோட
பாலையாகி மரிக்குதே வாழ்வுந்தான்......

இமைகளில்......


சரணம் 2 :

புல்மீது கால் நடந்து தேய்கிறேன்...
வான்ஏற தான் முயன்று சாய்கிறேன்...
புல்மீது கால் நடந்து தேய்கிறேன்...
வான்ஏற தான் முயன்று சாய்கிறேன்...

மலரோடு தென்றலுக்கு ஏன் இன்னும் பேதம்...
உறவாடு விலகென்று யார் சொன்ன வேதம்......

சந்தோச காலங்கள் உன்னோடு
கானலாகி தொலையுதே தாபந்தான்...
என்தேக கோலங்கள் இன்றோடு
சாம்பலாகி கரையுதே சாபந்தான்......

இமைகளில்......

எழுதியவர் : இதயம் விஜய் (1-May-17, 8:21 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 503

மேலே