நினைவுச்சாரல்

மங்கையர் ஆடிய பல்லாங்குழி
மதிவளர உதவிய பல்லாங்குழி
கைகளுக்குப் பயிற்சி அளித்தாய்
கணிதத் திறனை வளர்த்தாய்
அன்று சீதனமாய் வந்தாய்
இன்று எங்கு சென்றாய்
மீண்டு வா பல்லாங்குழி
மீண்டும் எங்களை மகிழ்விக்க!
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்