உங்களுக்குள் புதைந்துள்ள முத்துகளை வெளிக்கொண்டுவர நீங்கள் தயாரா
இயற்கையில் உருவான முத்தானது சிப்பிக்குள் சிறைப்பட்டு, பாறைகளுக்கு நடுவிலே பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும்..
அம்முத்தை வெளிக்கொண்டுவர கடலுக்குள் மூச்சை அடக்கி மூழ்குவார்கள் முத்தை விரும்பும் மனிதர்கள்....
தன்னில் புதைந்துள்ள முத்தை வெளிக்கொண்டு வராது, பிற முத்துகளை நாடிப் பயனென்ன?..
முத்துகள் வெளிப்படும் போதே உலகம் அறிகிறது அதன் மதிப்பை...
மனிதா, உன்னுள் புதைந்துள்ள நற்பண்புகளும், ஆக்கப்பூர்வமான திறமைகளுமாகிய மறைந்துள்ள முத்துகள் வெளிப்பட்டால் மட்டும் உலகறியும் உனது மதிப்பை...
அம்முத்துகள் உன்னுள் இருந்து வெளிப்பட வேண்டுமெனில் நீ மூழ்க வேண்டும் அன்புக்கடலில்...
அன்புக்கடலில் மூழ்கி அன்புக்கடலிலேயே வாழும் இருதயங்களில் இருந்து வெளிப்படும் அம்முத்துகள்...
அவை மிகப் பிரகாசமானவை...
இவ்வுலகிலேயே சொர்க்கத்தை உருவாக்கி நிலைநாட்டும் சக்தி பொருந்தியவை...
இம்முத்துகளை அணிந்தோரெல்லாம் உலகில் மற்ற அனைவரையும் விட ஒளி பொருந்திய சுடராய் வாழ்ந்து மறைந்தனர் ஆகாயச் சூரியனுக்கிணையாய்....
அம்முத்துகள் நம் அனைவரிடத்திலும் மறைந்துள்ளன இயற்கையின் அன்பு பிரசாதமாய்....
வெளிக்கொண்டு வாருங்கள் ஒளிவீசும் அம்முத்துகளை...