பிள்ளை ஈன்ற மலடிகள்

அடியே பேச்சி சேதி கேள்விப்பட்டியா
சாயங்காலம் வான்மதி மகளுக்கு வளகாப்பு டி......
நேரம் : சூரியன் சாயும் காலம்

தாய் கை வழி
சேய் கேட்கும் முதல் இசை
வளையல் ஓசை

வளையல் காப்பிட்டு
வா மகளே வா
மலட்டு உலகிற்கு வா
வா மகனே வா
மதிகெட்ட உலகிற்கு வா
கள்ளிப் பால் கலாச்சாரத்துக்கு வா

சிவராத்திரியில கரடியபாரு
நல்ல காரியம்னு தெரியாம
நடு வீட்டுக்குள்ள வரா பாரு
மலடி மலடி
மகன பெத்து போடல மலடி
கள்ளிப் பால் ஊத்த கூட
ஒரு பொட்டப் புள்ள பெக்க
வக்கத்த மலடி மலடி
சில நஞ்சு தோய்த்த
நாவின் ராகங்கள்

என்னய பெத்தவ ஒருத்தி
தத்தடுத்து மடியில அள்ளி
வாசத்த கொடுத்து
மல்லிகைனு பேர வச்சவளுக்கு
ஊர் வச்ச பெயர் மலடி

நான் தான் பூக்காரி மக
நாலு முழம் மல்லிகை
இப்ப வளகாப்பு நாயகி
கூந்தலுல இருந்து பேசுறேன்

யாரு மலடி யாரு மலடி
கற்ப இழந்த
உங்க நாக்குதான் மலடி
என் ஆத்த பூக்காரி இல்லைனா
உங்க கூந்தலெல்லாம் மலடி
கல்யாண மேடையிலையே
மணமகளெல்லாம் மலடி
தெரு முக்குல உள்ள
பெண் கடவுளும் மலடி


ஊரே பழித்து பேசுது
பாதியில போகுறா
புள்ள பெத்த
மலடிகள தாண்டி போகுறா
தெருமுனைக்கு பேகுறா
பூக்காரி
- பே.ருத்வின் பித்தன்

எழுதியவர் : (2-May-17, 8:30 pm)
பார்வை : 355

மேலே