பணமே பணமே
பணமில்லா மனிதன் பிணம்
மனிதமில்லா பணம் ரணம்
தேடுபவன் உணர்வதில்லை
உறவுகளின் மகத்துவத்தை
ஏழைகளின் உணர்வுகளை
நேர்மையின் கண்ணியத்தை
வாழ்வின் மகிழ்ச்சியை
காலத்தின் நிலையாமையை
தேடிக் களைக்கையில்
கரைந்துவிடும் வாழ்க்கை
பணமின்றேல் வாழ்க்கையில்லை
வீண் பகட்டும் தேவையில்லை
போதுமென்ற மனமின்றேல்
என்றுமே மகிழ்ச்சியில்லை