ஜன்னல்கள்
வாங்கிய தர்பூசணி
நிறம்மாறி நீரிழந்து கிடக்கிறது
விற்ற முகம்
அந்த ஜன்னல்கள்
அப்படி அடித்துக் கொண்டன
நீ நுழைகிறாய்
அழகான புல்வெளி
கொஞ்சம் வளர்ந்து இருக்கிறது
நான் நடந்த பாதை
இசைத்த குயில்
நல்ல துணையை தேடுகிறது
பொம்மைக்கடையில் குழந்தை
பச்சிளம் குழந்தை
நான் பாட தலையசைக்கிறது
மஞ்சள் நிற ஓணான்
சிறகுலர்த்திய ஜோடிப் புறாக்கள்
ஈரம் சொட்ட புணருகின்றன
கோவில் சிற்பங்கள்
அசைவோடு இலைகள்
கிளை விட்டு விழுகிறது
பிரகாசமாய் மின்னல்
நெடுநேர சிந்தனை
அடித்த காற்றில் திரும்புகிறது
புத்தகத்தின் பக்கம்
காற்றோடு மழைச்சாரல்
வீட்டினுள் நுழைகிறது
காலடித் தடங்கள்