கனவல்ல நினைவும் நீயடா

அமாவாசை வானம்
அல்லிப்பூக்கள் போன்ற வெள்ளிகளை மறைப்பதுப்போல்
அமைதியினால் என் நெஞ்சம்
ஆனந்தமா ? அழுத்தத்தினால் சோகமா ?
அதை நானே அறியாதவண்ணம் மறைக்கிறது !

நிலா கோபத்தினால் முகம் மறைத்து
நீல வானத்தை கருமையாகியது
நீயோ கோபத்தினால் எனை வெறுத்து
நீங்கி எனை வெறுமையாக்கிவிடாதே !

எழுதியவர் : ச.அருள் (6-May-17, 2:52 pm)
பார்வை : 351

மேலே