என் கவிதைக்குமா
தென்றல் வருடிய
ரோஜா போல் ஆனதடி
என் தேகம்
நீ என்னை கடந்துப்
போனப்போது...
மோகமுள்ளில் சிக்கிய
சேலைப்போலானதடி
என் இதயம் நீ என்னை பார்த்தப்போது...
பனிச்சாரலில் நனைந்து
மெல்ல சிரித்த
பூக்கள் போலானதடி
என் காலம்
நீ என்னோடு பேசியப்போது...
சிந்து என்ற உன் பேரை
சொன்னாலே என் சிந்தனை
எல்லாம் ரெக்ககட்டி பறக்குதடி...
சிந்திய என்
கவிதை வரிகளில்
சில சொற்கள்
உன் அழகை சொல்லும்
வரிகளில் மட்டும்
சேர்வோமென அடம்பிடிக்குதடி...
என்னவென்று சொல்ல
என் கவிதைகூட
உன் அழகைதான் விரும்புதடி...