காதலித்து பார்
காதலித்து பார்
வாழ்க்கையில்
ஏற்றம் உண்டாகும்
காதலித்து பார்
உன்னை நீயே
நேசிக்க தொடங்குவாய்
காதலித்து பார்
ஒழுக்கம் துளிர்க்கும்
காதலித்து பார்
விடியற்காலையில்
எழ தொடங்குவாய்
காதலித்து பார்
அழகான பொய் சொல்ல
கற்று கொள்வாய் கவிதை வடிவில்
காதலித்து பார்
பட்டாம்பூச்சி சிறகடிக்கும்
உன் இதயத்தில்
காதலித்து பார்
கானல் நீரிலும் மீன் பிடிப்பாய்
காதலித்து பார்
உன் மாற்றம்
உனக்கே வியப்பை ஏற்படுத்தும்
காதலித்து பார்
அன்பின் அர்த்தம் புரியும்
காதலித்து பார்
விண்ணை தாண்டும் வல்லமை
உன்னுள் தோன்றும்
காதலித்து பார்
வாழ்க்கையின் வலி புரியும்
காதலித்து பார்
வாழ்க்கையில் வழி தெரியும்
காதலித்து பார்
கனவுக்கான தொடங்குவாய்
காதலித்து பார்
கல்லும் முள்ளும்
ரோஜாமலராய் தோன்றும்
காதலித்து பார்
விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்வாய்
காதலித்து பார்
காத்திருக்க கற்றுக்கொள்வாய்
காதலித்து பார்
காமம் தெரியாது
காதலித்து பார்
நட்பு வளரும்
காதலித்து பார்
உலகம் உன் கையில் வரும்
காதலித்து பார்
சமாதானம் பிறக்கும்
காதலித்து பார்
ஒருமுறை வாழ்க்கையில்...!