இலக்கிய காதல்
கையிலே வில்லெடுத்து இமயத்தில் போர்தொடுத்து அங்கே ஓர் கல் எடுத்து நம் காதல் சின்னம் செதுக்கப்படும். செந்தமிழின் சொல்லெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து அணி கொடுத்து அடிதொடுத்து நம் காதல் கவிதை பாடப்படும். வயலிலே ஏர்தொடுத்து விளையும் பயிருக்கு நீர்கொடுத்து ஊருக்கு உணவளிக்கும் உயர்ந்த உழவனிடத்தும் பரவும் நம் காதல் சரித்திரம். தோன்றி மறைய இதுவொன்றும் கானல்நீர் கிடையாது அழியாது நிற்க்கும் நம் காதல்.