மழைக்காதல்
மழைக்காதல்
மழை நனைத்த
ஒரு மாலையில்
உன் கைவிரல் கோர்த்து
நனைந்து நடந்த
தருணங்களை
தொலைத்து நிற்கிறேன்...
மழைத்துளிகள் மறைய
மாரிக்காலம்
மாறிப்போனது...
கனவாய் போன
காதல் நினைவுகளுடன்
மனதில்
இன்னும்
மிச்சமிருக்கிறது
மழையில்
நனைந்த ஈரம்...
நிலாரவி