மயக்கிடும் மழையே
மின்னல் என்னை வட்டமிட
மிரண்டேன் மயங்கி நின்றேன் !
செல்ல மழை எனை தழுவ
சிலிர்த்து பயம் உருகிப்போனது,
சின்ன சின்ன மழைத்துளி சிதற
சிவந்தேன் சிலிர்த்தேன்
சிட்டாக பறந்தேன் !
அழகிய நிலவோடு
அரும்பாக இருந்த நான்
அழகிய மழைதுளியால்
அரும்பு நான் விழித்தெழுந்தேன் !
விழித்ததும் வானமது கவிபொழிய
விண்ணோடு பந்தம்கொண்டு
விரல்பிடித்து மேகத்தில் மெத்தையமைத்து
வா என்று அழைத்து அமர செய்தது !
வியப்பில் நான் நிற்க
வானமே இறங்கி வந்து
விரலோடு விரல்கோர்த்து
விண்ணகம் ஏற்றி மேகத்தில் அமர்த்தியது !
வாசத்தோடு நேசம் நுகர்ந்து
வானோடு இணைந்து ரசித்தேன் மழையினையே !