அவளின் தனிமை

என்ன யோசிக்கிறாய்
நான் உன்னை
விட்டு சென்ற நிமிடம் முதல்

நான் இல்லா
உன் தனிமை
யாரை தேடுகிறது

உன் தனிமை முகத்தை
நான் பார்க்க
விரும்பவில்லை

உன் தனிமையை
கனவுகள்
ஆள்கிறதா

உன் தனிமையை
உறக்கம்
சூழ்ந்துள்ளதா

உன் தனிமையில்
நீ பார்ப்பதை
நான் தேடுகிறேன்

உன் ஆள் தனிமையில்
நீ யோசிப்பதை
நான் யாசிக்கிறேன்

உன் தனிமை
என் தனிமையை
நொறுக்குகிறது

உன்தனிமையின்
பசி என்னை
தேடி வருகிறது

உன்தனிமையின்
நேரங்கள்
மின்னலாய் சென்றாலும்

என் தனிமை
ஆமையை
நகருகிறது

கடவுளிடம்
வேண்டிக்கொள்கிறேன்
உன் தனிமை
எனக்கு வேண்டாம்


என் தனிமை
யாருக்கும் வேண்டாம் .

எழுதியவர் : ரிச்சர்ட் (10-May-17, 6:14 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : avalin thanimai
பார்வை : 134

மேலே