கோலம்
ஏழு வண்ண வானவில்லை எங்கிருந்தோ பிடித்து வந்து...
வளைத்து நெளித்து
வலை திரித்து
வீசியிருக்கிறாள்
வீட்டு முற்றத்தில்
பதினாறு புள்ளி கோலமாக......
பெண்ணே உன் விரல் வரைந்த இந்த கோலம்
பிரமன் கண்ணில்
படாமல் பார்த்துக் கொள்.....
படைக்கும் தொழிலே
(ஒப்)படைத்து விட போகிறான் உன்னிடம்......
~~~பா.அழகு துரை~~~