இருதயத்தின் அல்லது மூளையின் உபகாரத்தையோ நாடுவேன்
என் நேசமுடையோரே!!!
சுயதேவைக்கொண்டோ
எனதன்பின் அருமை உணராதோ
நடப்பின்...
எதிர்விசையாய் நானும்
செயல்பட்டு என் காயங்களுக்கு மருந்திடேன்..
மாறாக
மன்னிக்க இருதயத்தின் உபகாரத்தையோ
மறக்க மூளையின் உபகாரத்தையோ
நாடுவேன்...
காயமுற்ற என் இருதயத்திற்கு
மன்னிக்க பலமிழந்து துடித்தாலும்...
மறக்கும் சக்தியை
என் மூளை இன்னும் இழக்கவில்லை!!!!
மறதி வரம் ஈந்த படைபோனுக்கு
நன்றி கூறி மறக்கிறேன்...