குறள் அமுதம்

குறள் அமுதம்

கங்கை உயர்கா விரிபிரவா கம்புனிதம்
திங்கள் பொழியுமமு தம்

சிந்தனைப் பூங்குயில் பாடிடும் பூங்கவிதை
செந்தமிழ்த்தொல் காப்பியன்வெண் பா

கிழக்குவான் வாசல் திறக்க உதயம்
அதிசயம் மேற்குவா னம்

நீரோடை தன்னில்நீ ராடிடும்சிட் டுக்குருவி
வானே குமழகு பார்

தாவணித் தென்றல்தாழ் பின்னல் குனிந்து
நடந்திடும் கோபுர மோ

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-May-17, 9:06 am)
பார்வை : 65

மேலே