உயிர் தந்த உயிர்
உயிர் தந்த
உயிரே
என்னுலகே
உனக்கு
அன்னையர்
தின
வாழ்த்துக்கள்.....!!
வலிபொறுக்க
விழிமூடினாய்.....
அன்றுதான்
விழிதிறந்தேன்....
வாழ்க்கை
என்று
உன் கையில்
தவழ்ந்தேன்.....!!
தூக்கம்
தொலைத்து
தூக்கம்
தந்தாய்.....
துயரம்
சுமந்து
என்னுயரம்
பார்த்தாய்.....!!
கண்ணே
மணியே.....
கண்மணியே
என்று
கண்ணுக்குள்
உன்னுலகம்
நான்
ஆனேன்.....!!
அகிலம்
படைத்தது
ஆண்டவன்
என்று
வேதங்கள்
சொல்லும்.....ஆனாலும்
இல்லை
என்று
மறுத்துவிடும்
அன்னை
உன் அன்பு......!!
தெய்வம்
கூட
கோபம் கொள்ளும்....
என்றென்றும்
செல்லம்
கொஞ்சும்
தேவதை
தாய்தான்......!!
முகம்
பார்த்து
பசிதீர்க்கும்
பாசக்காரி......
பணிவிடைகள்
செய்து......
துணிமணிகள்
தூய்மை
செய்து......
துவண்டுவிடாத
சாகசக்காரி......!!
தாய்
என்னுலகம்......
தாயே
உலகம்......!!
அனைத்து
அன்னையர்களிட்கும்
அன்னையர் தின
நல்வாழ்த்துக்கள்.....!!