வாழ்க்கையில் சோதனை நண்பனை காட்டும்
உன்னை சுற்றி ஒரு
நண்பர்கள் கூட்டம்
ஆட்டம் பாட்டம்
என்று கழிகின்றன
நாட்கள், நீயோ
ஆனந்தத்தின் எல்லையில்
திடீரென உனக்கு
வாழ்க்கையில் வந்து
சேர்ந்தது ஒரு
பெரும் சோதனை
நண்பர்கள் கூட்டம்
ஒருவனைத்தவிர
இருந்த சுவடு இல்லாமல்
காணாமல் போனது
இப்போது நீ அறிந்தாய்
உன் நண்பனை
அவன் நண்பன்
மட்டும் அல்லன்
நீ அவன் நட்பின் நிழலில்
அவன் உன் நட்பின் நிழலில்
வாழ்க்கையில் சோதனைகள்
உன்னை சூழ்ந்திருப்பவரை
யார் யார் என்று காட்டிவிடும்
நண்பனும் நட்பும் வெளிப்படும்