தமிழுக்கு அடிமை உண்டோ - மன்சூர்

கவிதை ஆசிரியர் இங்கு உண்டோ?
பாடல் ஆசிரியர் எவரேனும் உண்டோ?
சொல் வளம் மிக்கவர் உண்டோ?
குரல் வளம் மிக்கவர் எவரேனும் உண்டோ?

வாருங்கள் சிறந்த பாடலை உருவாக்க!
வாருங்கள் அந்த பாடலுக்கு அடிமையாக!

மதுவுக்கு அடிமையானவர்களை
தமிழுக்கு அடிமையாக்குவோம்!
காதலுக்கு அடிமையானவர்களை
காதல் கவிதைக்கு அடிமையாக்குவோம்!

வாருங்கள் சிறந்த பாடலை உருவாக்க!
வாருங்கள் அந்த பாடலுக்கு அடிமையாக!

அந்த பாடல் நம்மை அறிவாக்கும்!
அந்த பாடல் நம்மை அடிமையாக்கும்!
அந்த பாடல் நம்மை ரசிக்க செய்யும்!
அந்த பாடல் தமிழரை உலகிற்கு எடுத்து சொல்லும்!

வாருங்கள் சிறந்த பாடலை உருவாக்க!
வாருங்கள் அந்த பாடலுக்கு அடிமையாக!

(பிடித்திருந்தால் பகிரவும்)

எழுதியவர் : மன்சூர் (15-May-17, 9:20 pm)
சேர்த்தது : மன்சூர்
பார்வை : 414

மேலே