இத்தனை தாமதமோ

இத்தனை தாமதமோ - முன்புவர
இத்தனை தாமதமோ ?
ஈசன் மகனே கண்முன்பு தோன்றிட
இத்தனை தாமதமோ ?

முத்து மணிமார்பில் - பூவாய்
. முகிழ ஆசைகொண்டேன்
வித்தகப் பாதத்திலே - துகளாய்
. வீற்றிருக்க வைப்பாய் ! ஐயப்பா ( இத்தனை தாமதமோ )

சங்கடம் தீர்ப்பவனே - அழகு
. சபரி மலைவாசா !
எங்களின் சற்குருவே ! - சரணம்
. ஏற்றி மொழிந்திடுவோம் ! ஐயப்பா ( இத்தனை தாமதமோ)

வன்புலி வாகனனே - அடர்ந்த
. வனத்தில் வாழ்பவனே
மன்னவன் புத்திரனே - பொருதி
. மகிசியைக் கொன்றவனே ! ஐயப்பா ( இத்தனை தாமதமோ)

சிரித்த பூமுகத்தில் - தோன்றும்
. செருக்க ழிந்திடுமே
பருத்த கன்னத்திலே - எங்கள்
. பாவம் தொலைந்திடுமே ! ஐயப்பா ( இத்தனை தாமதமோ)

மாலை அணிந்துவந்தோம் - மலைமேல்
. மாண்புடன் ஏறிவந்தோம் !
காலைக் கதிரவனாய் - ஒளியை
. கண்ணுக் களிப்பவனே ! ஐயப்பா ( இத்தனை தாமதமோ)

ஆசி கொடுத்திடப்பா - அருளை
. அள்ளிக் கொடுத்திடப்பா !
பேச வருகுதில்லை - உன்றன்
. பேருரு கண்டபின்னே ! ஐயப்பா ( இத்தனை தாமதமோ ? )

படம் : சுதன் காளிதாஸ்

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-May-17, 6:51 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 100

மேலே