என்னில் நிலைத்திடு என் கண்ணே

என் அன்பு நீ ஆக்ரோஷம் நீ
என் மகிழ்வு நீ இகழ்வு நீ
என் ஆரோகணம் நீ அவரோகணம் நீ
கண்ணாடி விம்பமாய் என்னைக் காட்டும் நீ
என் அசைவில் நீ உன் இசைவில் நான்
எல்லாமாய் எனக்கு நீ
என் உயிரில் நுழைந்து
உணர்வில் கலந்த உறவே
இன்னும் இனியும் என்றும் என்னில்
இணைந்து நீ இருப்பாயா

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : (16-May-17, 1:09 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 131

மேலே