அறியாமை

இன்று பண்டிகையல்ல
திடீரென வெடிச்சப்தம்
சிலர் ஓடினார்கள்
பலர் ஒளிந்தார்கள்
முத்தமழையில் என்னை நினைத்து என் பெற்றோர்
கண்ணெதிரில் நடந்தேறிய விளையாட்டில் கலந்துக்கொண்டார்கள்
நீண்ட நேரம் ஆயிற்று
சப்தமும் அடங்கிற்று
நடைபலகாத என் கால்களால் தேடிச்சென்றேன் என் பெற்றோரை
அம்மாவென்றழைக்க சரியாய் வரவில்லை
சிறிதும் ஒன்றும் விளங்கவில்லை
இமைகள் மூடாது தாயை பார்த்தவாறு தந்தை தூங்கிக்கொண்டிருப்பதை கண்டேன்
பசியால் பால் தேடி முதலில் அவளருகில் சென்றேன்
இருவரும் என் அழுகுரல் கேட்டும் பொருட்படுத்தவில்லை
ஆழ்ந்த தூக்கத்தில் அவர்கள்
ஏதும் புரியாது என்மனதில் பல புதிர்கள்..!

எழுதியவர் : (16-May-17, 2:07 pm)
சேர்த்தது : மல்லி
Tanglish : ariyaamai
பார்வை : 157

மேலே