உழவனின் கண்ணீர்

😭உழவனின் கண்ணீர்😓
நாட்டின் முதுகெலும்பு
முறிவதற்கான
முன்கூட்டிய
எச்சரிக்கை
உண்ணும்
மனிதயினம்
உணவின் மூலதனம்
மறந்த கேவலம்
பயிர்களை
ஈன்ற வயல்வெளிகள்
கான்கிரீட்டால்
கற்பையிழந்த
அவலம்
சுயநலம்
துறந்த உள்ளம்
பொதுநலனுக்காய்
கதறும் தருணம்
உதவிக்கரம்
நீட்டாத
அரசாங்கத்தின்
விபச்சாரப்போக்கு
பசி, பஞ்சம், பட்டினி
இணைந்து
மண்ணுயிர்களை
வதைப்பதற்கான
குறியீடு
கல்லை கடவுளாகவும்
மனிதனை
கல்லாகவும் உணரும்
முட்டாள்களின்
அறியாமை
அம்மணமாய்
போராடியும்
அடியோடு
துடைக்கப்படாத
ஈரம்....