தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு குழந்தையின் குரல் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !

குழந்தையின் குரல் ! கவிஞர் இரா .இரவி !

குழந்தையின் குரல் கேட்டுப் பாருங்கள்
கவலைகள் காணாமல் போகும் பாருங்கள் !

புல்லாங்குழலை விட இனிமையானது என்றும்
பழைய யாழை விட இனிமையானது என்றார் வள்ளுவர் !

இனிமையான குரலால் கேட்பவர்களின்
இதயத்தைக் கொள்ளை அடிப்பார்கள் !

குழந்தையின் குரலை கூர்ந்து கவனியுங்கள்
கற்கண்டு கரும்பின் இனிப்பு இருக்கும் !

கள்ளம் கபடம் இல்லாதது என்றும்
கேட்டிட எவருக்கும் இனிமை மிக்கது !

குழந்தையின் குரலில் நகைச்சுவை இருக்கும்
குழந்தையின் குரலில் நற்கருத்து இருக்கும் !

குழந்தையின் குரலில் காந்த சக்தி இருக்கும்
குழந்தையின் குரலில் குதூகலம் இருக்கும் !

குழந்தையின் குரலில் உண்மை இருக்கும்
குழந்தையின் குரலை அலட்சியம் செய்யாதீர் !

பிழையாக உச்சரித்தாலும் சுவை இருக்கும்
பிறர்மனம் கவரும் வண்ணம் இருக்கும் !

மனதில் பட்டதை அச்சமின்றி உரைக்கும்
மண்ணில் வாழும் தேவதை குழந்தை !

பிறந்தவுடன் குழந்தை குரல் தர வேண்டும்
பிறந்த குழந்தை அழவில்லை எனில் சிரமம் !

பிறந்ததும் குழந்தையின் குரல் வந்தால்தான்
பிரசவம் என்பது நிறைவாக அமையும் !

அழுது பிறக்கும் குழந்தை வாழ்க்கை மற்றவர்
அழுது புலம்பிட இறப்பில் முற்றுப் பெறும் !

அழுகையில் தொடங்கி அழுகையில் முடியும்
அர்த்தமுள்ள வாழ்வு அனைவருக்குமான வாழ்வு !

குடும்பம் மட்டும் அழுதால் தன்னலவாதி
கூடி ஊரே அழுதால் பொதுநலவாதி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-May-17, 12:34 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 115

மேலே