மீசைக்கனவு

" என்ன பேரான்டி! இன்னும் முளச்சு மூனு இல விடல, அதுக்குள்ள மீசையை முறுக்கி விடுற. ", என்றவாறே வந்தார் அந்த அன்புக்குரிய தாத்தா..

" அதெல்லாம் ஒன்றுமில்ல தாத்தா, சும்மா மீசையை முறுக்கி பார்த்தேன். ", என்றேன் புன்னகையோடு..

" மீசையை முறுக்கி விடும் போது நீ அப்படியே நம்ம திரவியங்காத்தான் சாமி மாதிரியே இருக்கடா. ", என்று தாத்தா பாராட்ட,
திருக்கிய மீசையோடு கல்லூரி செல்லக் கண்டவர்களெல்லாம் ஏதோ சொல்ல வந்தவர்களாய் சொல்லாது சென்றார்கள் ஆசிரியர்களுட்பட.

" ஐ நமக்கும் மரியாதை கொடுக்கிறாங்களே! ", என்று நினைத்துக் கொண்டு, நண்பர்களிடமெல்லாம் மீசைக் காட்டி, " நல்லா இருக்கா? ", என்று கேட்டேன்..
எல்லாரும், " நல்லா இருக்கு, சூப்பரா இருக்கு. ", என்று சொல்ல, கர்வத்தில் மீசையை மீண்டும் மீண்டும் திருக்கிவிட்டுக் கொண்டேன்...

அப்படியே செல்கையில் தோழியொருத்தி நண்பனிடம் ஏதோ சொல்ல, " என்ன சொன்னா அவ? ", என்று நான் நண்பனிடம் கேட்க,
அவனும் மழுப்ப, மீண்டும் நான் கேட்க,
அவனும் மழுப்ப,
மீண்டும் நான் கேட்க கோபப்பட்டவனாய், " உன்னைப் பார்த்தாலே பயமா இருக்கிறதாம். ", என்க, " அடேய் நான் ஒரு குழந்தைடா ", என்றவாறே எழுந்தேன் தூக்கத்திலிருந்து.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-May-17, 12:11 am)
பார்வை : 1480

மேலே