நெருடலில் நெஞ்சம்
நெருடலில் நெஞ்சம்
உருகுதே உள்ளம்...
மருகும் மனதின்
ஓரத்தில் துயரம்.
கண்ணீர்த் துளிகளாய்
விழிகளின் வெளியே...
தொண்டை அடைத்து
சிதறிய துக்கம்.
இனியொருமுறை வேண்டா
தாங்க இயலாதே...
சோகத் தாலாட்டில்
கெட்டது உறக்கம்.
சு.சுடலைமணி