மரண நிழல் தேடும் முதிர் கவிஞன்-சந்தோஷ்

---------------------------------------------------------
வயது முற்றிய
ஒரு கூடு
இளமை மாறாத
ஓர் ஆன்மாவை
சுமந்தலைகிறது.

வாசிப்புச் சுவையும்
வாசித்த அமுதமும்
வயோதிக நாக்கில்
கற்கண்டாய்...
மரணச் சுரப்பிகளில்
கரையத் தொடங்குகிறது.

பருவங்களை மென்று செரித்த
வெண்ணிற இரவுகளை
வயோதிக சாளரத்தில்
தோரணமாக்கி
வைத்திருக்கிறது
காலம்.

தாபக் கிளிகள்
காதல் குருவிகள்
காலத் தோரணங்களில்
கூடுகள் கட்டி..அதற்கான
வாழ்வுக்
காடுகளை இலட்சியங்களற்று
தொலைத்து விட்டிருந்தன..

போனது திரும்பாது
மாண்டது மீளாது.
ஆனால்
எழுதியது....ஆகும்
வரலாறு..!
**

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (24-May-17, 4:12 pm)
பார்வை : 107

மேலே