அவளைப் போன்ற ஒருவள்
கூந்தலின் அமைப்பிலும்
காதணிகள் அசைவிலும்
அவளைப் போலவே
ஒருவளைக் கண்டேன்...
கண்களில் நிச்சயம் அவளுக்கு
இணையாக இருக்கமாட்டாள்...
ஒருவேளை இருந்துவிட்டால்???
என்ற அச்சத்திலே காணாமல்
தவிர்த்து வந்தேன் அவள் போல்
தெரிந்த பெண்ணின் கண்களை...