இப்படியும் ஒரு ஒருமுகக் காதல்
உன்னைப் பார்த்து பார்த்து
என் கண்கள் பூத்துப்போயின
உன் கண்களோ என்னை
ஒரு முறையேனும் பார்க்கவில்லையே
உன் அழகு என் மனதை மயக்கியபின்
நீ தான் என் காதலி என்று
என் மனது சொல்லியது
இப்போது என்ன செய்வது
ஒரு புறாவாய் மாறி
உந்தன் கையில் வந்து
சேர்ந்திடலாம் என்று
மனதிலே புறாவாய் மாறி
உன் கையை நோக்கி பறந்தேன்
நீயோ அப்போதும் என்னை
விரட்டிவிட்டாய் -உனக்கு
வெண் புறாதான் பிடிக்கும் போல!
இப்போது என் மனம் தெளிவு பெற்றது
நான் நானேவாய் சிந்தித்தேன்
அடுத்த ஜென்மம் என்று
ஒன்றிருந்தால் இறைவா
என்னை ஒரு அறிவும் அழகும்
ஒருங்கே அமைந்த ஆண் மகனாய்
பிறக்கவிடு அப்போதும் இந்த
பெண்ணிற்கு என் எதிரே எனக்காய்
என்னை காதலிக்க ஏங்கும் அழகியாய்
பிறப்பு தருவாயா-என் உடைந்த உள்ளம்
அப்போது அமைதி கொள்ளும் இந்த இவள்
இன்றைய கர்வம் அந்த பிறவியில்
அடங்கிடுமே அவள் வேண்ட
என் இசைவில் நான் அவளை
என்னவளாய் ஏற்றுக்கொள்வேன்