ஹைக்கூ கவிதை
சீடன் வருவதை
பார்த்தார் குரு
கண் மூடினார்..
மின்மினி பூச்சியின்
வெளிச்சம் ரசிக்க
மின்சார வரி இல்லை!
சாமியார் சங்கு
ஊத ரசிக்கும்
சில குரல் விலைகொடுத்து!
அணை காய்ந்தது
மனை வீழ்ந்தது
வாழ்வு!
தனிமனிதன் ஓடுகிறான்
தேனீருக்காக
குடிக்கவில்லை!
குழந்தைகள் ரசிக்கும்
அழகு இயற்க்கை
வெறுப்பு அதிகம் தனிமை!
புத்த தரிசனம்
வேண்டுமா நடந்து செல்
ஜென் வரும்..
காட்டுக்குள்ள ராஜா
நரி தந்திரம்
ஊழல்!
தண்ணீர் பூமிக்கு அடியில்
கண்ணீர் விழியில்
தேடவில்லை..
குழந்தைகள் மனதில்
சிரிப்பு வெள்ளம்
குழந்தையான அப்பா அம்மா!